என் மலர்

  செய்திகள்

  ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக பல்கலைக்கழக பேராசிரியர் மீது மனைவி புகார்
  X

  ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக பல்கலைக்கழக பேராசிரியர் மீது மனைவி புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக மனைவி கொடுத்த புகாரின்பேரில் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  மதுரை:

  மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள தாதன்குளத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் சுரேஷ்குமார். இவருக்கும் பேரையூர் எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்த விஷ்ணு பிரியா (வயது25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

  சுரேஷ்குமார் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

  திருமணத்தின்போது 40 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்ததாகவும், தற்போது கூடுதலாக ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு சுரேஷ் குமார் மற்றும் அவரது உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் விஷ்ணுபிரியா திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

  இன்ஸ்பெக்டர் மீனா புகாரின்பேரில் பேராசிரி யர் சுரேஷ்குமார், உறவினர்கள் ராஜகோபால், ஜோதி குரு, முருகன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×