என் மலர்

  செய்திகள்

  திருவெண்ணைநல்லூர் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் - 2 வாலிபர்கள் கைது
  X

  திருவெண்ணைநல்லூர் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் - 2 வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவெண்ணைநல்லூர் அருகே பிளஸ்-2 மாணவியை கற்பழித்த வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
  உளுந்தூர்பேட்டை:

  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொங்கராயனூரைச் சேர்ந்த 17 வயது மாணவி. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

  நேற்று அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சத்தியராஜ் (32) ஆகிய 2 வாலிபர்கள் அந்த மாணவியின் வீட்டுக்கு வந்தனர்.

  உங்களுக்கு சொந்தமான மாடு அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் மேய்கிறது என்று கூறினர். இதை நம்பிய அந்த மாணவியும் கரும்பு தோட்டத்துக்கு சென்றார்.

  அப்போது மாணவியை பின் தொடர்ந்து அந்த 2 வாலிபர்களும் சென்றனர். திடீரென அவர்கள் அந்த மாணவியின் வாயை துணியால் பொத்தினர். இதில் அந்த மாணவி மயக்கம் அடைந்தார்.

  பின்னர் மாணவியை அவர்கள் அருகே உள்ள வயல் பகுதிக்கு தூக்கி சென்றனர். அங்கு வைத்து 2 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

  மயக்கம் தெளிந்த மாணவியிடம் அந்த வாலிபர்கள் நடந்த வி‌ஷயத்தை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து விட்டு ஓடிவிட்டனர்.

  இது குறித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு மற்றும் சத்தியராஜை கைது செய்தனர்.
  Next Story
  ×