என் மலர்

  செய்திகள்

  ரேவதி கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடக்கும் காட்சி
  X
  ரேவதி கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடக்கும் காட்சி

  ஊட்டி இளம்பெண் கழுத்து அறுத்து கொலை: ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுக்கரை அருகே ஊட்டி இளம்பெண் வீட்டுக்குள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கோவை:

  நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜய ராஜ். இவரது மனைவி ரேவதி(வயது 45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

  கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ரேவதி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவர், குழந்தைகளை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறினார்.

  பின்னர் ரேவதி கோவை மதுக்கரையை அடுத்த அரிசிபாளையம் பகுதியில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார்.

  இன்று காலை அவர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  உடனடியாக அங்கு டி.எஸ்.பி. வேல்முருகன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். வீட்டுக்குள் ரேவதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், தலையில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

  பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். ரேவதிக்கு சந்தோஷ் என்ற வாலிபர் தான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார். அவர் வீட்டு உரிமையாளரிடம் ரேவதி எனது தாய் என கூறி உள்ளார்.இந்த நிலையில் இன்று காலை முதல் சந்தோசை காணவில்லை. அவர் எங்கு சென்றார்? என தெரிய வில்லை. அவர் உண்மையிலேயே ரேவதியின் மகன் தானா? அவர் தான் ரேவதியை கொலை செய்தாரா? வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×