என் மலர்

  செய்திகள்

  எண்ணூரில் லாரி மோதி போலீஸ்காரர் பலி
  X

  எண்ணூரில் லாரி மோதி போலீஸ்காரர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எண்ணூரில் லாரி மோதி போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவொற்றியூர்:

  மீஞ்சூரை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது45). எண்ணூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 19-ந் தேதி அவர் எண்ணூர், நேதாஜி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சரவணகுமாருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் செங்குன்றத்தை சேர்ந்த ராஜாவை கைது செய்தார்.

  Next Story
  ×