என் மலர்

  செய்திகள்

  முத்துப்பேட்டை அருகே குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்
  X

  முத்துப்பேட்டை அருகே குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முத்துப்பேட்டை அருகே கள்ளிக்குடி ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகிக்கபடவில்லை. இதனால் அப்பகுதியில் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  முத்துப்பேட்டை:

  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வருவதில்லை. கடந்த  5 நாட்களாக குடிநீர் விநியோகிக்கபடவில்லை. இதனால் அப்பகுதியினர் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இது பற்றி ஊராட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லை.

  இதனையடுத்து அதிருப்தி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாதர் சங்கதலைவர் தேவகி தலைமையில் தட்டுபாடில்லாமல் குடிநீர் வழங்கிடவேண்டி கள்ளிக்குடி கிழக்கு கடற்க்கரை சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் முத்துப்பேட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஓரிரு நாளில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

  இதனை தொடர்ந்து சாலை மறியலை  கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் திருத்துறைபூண்டி- முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.
  Next Story
  ×