என் மலர்

  செய்திகள்

  வேட்டமங்கலத்தில் ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை
  X

  வேட்டமங்கலத்தில் ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் மாவட்டம் வேட்டமங்கலத்தில் ஆபத்தான மின் கம்பத்தை மாற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  வேலாயுதம் பாளையம்:

  கரூர் மாவட்டம் வேட்ட மங்கலம் ஊராட்சி புங்கோடையில் இருந்து வேட்டமங்கலம் செல்லும் வழியில் தார் சாலை ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் மின் கம்பம் போடப்பட்டது. அக்கம்பத்தில் இருந்து அந்த பகுதியை சேர்ந்த வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் மின் கம்பம் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும் தரமற்ற மின் கம்பத்தாலும் மின் கம்பம் அடி பகுதி மற்றும் கம்பம் முழுவதும் கான்கிரீட்டுகள் கீழே விழுந்து வருகிறது.

  இந்நிலையில் இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது.  மின் கம்பம் கீழே  விழுந்தால் பக்கத்திலுள்ள வீட்டின் மீதோ தார்சாலை வழியாக செல்பவர்கள் மீதோ விழுந்தால்  பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  எனவே மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதான மின்கம்பத்தை மாற்றி விபத்தினை தடுக்க வேண்டுமென குளத்துபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×