search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரியை மாற்றியமைக்க கோரி சென்னையில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்: விக்கிரமராஜா அறிவிப்பு
    X

    ஜி.எஸ்.டி. வரியை மாற்றியமைக்க கோரி சென்னையில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்: விக்கிரமராஜா அறிவிப்பு

    ஜி.எஸ்.டி.வரியை முழுமையாக மாற்றி அமைக்க கோரி வரும் 25-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக மாற்றி அமைக்க கோரி வரும் 25-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிறு, குறு தொழில் செய்யும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை மாற்றி அமைக்கக் கோரி மத்திய- மாநில அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் தீர்வு காணப்படவில்லை. எனவே வருகிற 25-ந்தேதி வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம், ஓட்டல் உரிமையாளர் சங்கம், உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், அரிசி ஆலை சங்கம், லாரி உரிமை ஆய்வாளர் சங்கம், ஆட்டோ மொபைல் சங்கம், கொத்தவால்சாவடி அனைத்து வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வணிக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    தமிழகத்தில் சிறு, குறு தொழில்களை காப்பாற்றவும், வணிகர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படவும், ஜி.எஸ்.டி.யினால் ஏற்படும் விளைவுகளை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறவும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வணிகர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பேரமைப்பு நிர்வாகிகள், வியாபாரிகள் திரளாக பங்கேற்க உள்ளதால் ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கே.ஜோதிலிங்கம் முன்னின்று கவனித்து வருகிறார். அவருடன் செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆர்.எம்.பழனியப்பன் ஆகியோரும் தீவிரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன், மாவட்ட செயலாளர் தேசிகன், பொருளாளர் சின்னவன் ஆகியோரும் ஏராளமான வணிகர்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சாமுவேல் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    Next Story
    ×