என் மலர்

  செய்திகள்

  உசிலம்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
  X

  உசிலம்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உசிலம்பட்டியில் வீடு புகுந்து 5 பவுன் நகையை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  மதுரை:

  தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் சீனிக்கண்ணு. இவரது மனைவி பாலம்மாள் (வயது 60). இவர் உசிலம் பட்டி பகுதியில் உள்ள கவுண்டன்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார்.

  நேற்று பாலம்மாள் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ஒரு ஜோடி கொலுசு ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

  வீடு திரும்பிய பாலம்மாள் கதவை உடைக்கப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  இதுகுறித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்

  Next Story
  ×