என் மலர்

  செய்திகள்

  அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது
  X

  அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2 ஆயிரத்து 900 மாணவ- மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.
  சென்னை:

  தமிழகத்தில் உள்ள 518 என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 500 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

  இதற்காக சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதில் தொழிற்கல்வி மாற்றுத் திறனாளி மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்துவிட்டது.

  இந்த நிலையில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2 ஆயிரத்து 900 மாணவ- மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

  இந்த கலந்தாய்வை தமிழக உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் தொடங்கி வைத்தார். இன்று நடந்த கலந்தாய்வில் 199.75 முதல் 199.50 வரையிலான கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

  ஆகஸ்டு 11-ந்தேதிவரை இந்த கலந்தாய்வு நடக்கிறது. இதற்காக சுமார் 1.38 லட்சம் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×