என் மலர்

  செய்திகள்

  திருவள்ளூரில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது
  X

  திருவள்ளூரில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் பணம், 2 மின் விசிறி, 2 ஏசி, 1 டேப், 3 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
  திருவள்ளூர்:

  திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் உள்ள வங்கியின் துணை நிறுவனத்தில் மர்ம நபர்கள் கடந்த வாரம் கொள்ளையடிக்க முயன்றனர். சுவரை துளையிட முடியாததால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது.

  இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

  இந்த நிலையில் 2 வாலிபர்கள் திருவள்ளூரில் உள்ள மதுபான கடையில் ரகளை செய்துகொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் திருவள்ளூர் ராஜாஜிபுரத்தை சேர்ந்த ராஜேஷ்(23) ஈக்காடை சேர்ந்த சம்பத் (24) என்பதும் பல திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதும், வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

  அவர்களிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் பணம், 2 மின் விசிறி, 2 ஏசி, 1 டேப், 3 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ராஜேஷ், சம்பத் இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×