என் மலர்

  செய்திகள்

  ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்று படுகையில் டிராக்டர் மூலம் மணல் கொள்ளை
  X

  ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்று படுகையில் டிராக்டர் மூலம் மணல் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே வைகையாற்றில் மணல் கொள்ளை மீண்டும் அதிகரித்துள்ளது.

  ஆண்டிப்பட்டி:

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கடமலை குண்டு, வருச நாடு ஆகிய மலைப் பகுதிகளில் வைகையாற்றில் அதிகளவு மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கும் அலைந்து திரிந்தவண்ணம் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புகார் அளித்தனர். அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதால் மணல் கொள்ளை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது.

  ஆனால் தற்போது மீண்டும் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது.

  கடமலைக்குண்டு போலீசார் தங்கம்மாள்புரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வைகையாற்றில் வாலிபர் ஒருவர் டிராக்டர் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் ஓடமுயன்ற வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் அதேபகுதியை சேர்ந்த ஆனந்தன்(வயது21) என தெரியவந்தது.

  அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×