என் மலர்

  செய்திகள்

  பரமத்திவேலூர் அருகே பள்ளி வாகனம் மோதி விவசாயி பலி
  X

  பரமத்திவேலூர் அருகே பள்ளி வாகனம் மோதி விவசாயி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமத்திவேலூர் அருகே மொபட் மீது பள்ளி வாகனம் மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கபிலர் மலையை அடுத்த தெற்கு வலசுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (52) விவசாயி. இவர் தெற்குவலசு பாளையத்தில் இருந்து பாண்டமங்கலத்திற்கு இன்று காலை மொபட்டில் வந்தார்.

  அப்போது அந்த வழியாக தனியார் பள்ளி பஸ் ஒன்று பின்னால் வந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து தகவலறிந்த பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமண குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பெரியசாமியின் உடலை கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பள்ளி பஸ்சை ஓட்டிய டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×