என் மலர்

  செய்திகள்

  கொள்ளையர்கள் விட்டு சென்ற மது பாட்டில்கள் கடை முன்பு சிதறி கிடக்கும் காட்சி.
  X
  கொள்ளையர்கள் விட்டு சென்ற மது பாட்டில்கள் கடை முன்பு சிதறி கிடக்கும் காட்சி.

  ஆண்டிப்பட்டி அருகே காவலாளியை கட்டி போட்டு டாஸ்மாக் கடையில் துணிகர கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஆண்டிப்பட்டி:

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் இருந்து வெண்டிநாயக்கன்பட்டி செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.

  நேற்று வியாபாரம் முடிந்து பணியாளர்கள் கடையை பூட்டி சென்றனர். காவலுக்கு காவலாளி ஒருவர் இருப்பது வழக்கம்.

  நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம கும்பல் ஒன்று டாஸ்மாக் கடை அருகே வந்தது. காவலாளி அவர்களை விசாரித்தபோது திடீரென கத்தியை காட்டி மிரட்டினர். பின்பு காவலாளியை கட்டிபோட்டு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் அங்கிருந்த 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை அள்ளி சென்றனர்.

  காட்டு பகுதி என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. இதனால் காவலாளி இரவு முழுவதும் கட்டப்பட்ட நிலையிலேயே கிடந்தார். பின்பு கட்டை அவிழ்த்து விட்டு ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று காலை டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 4 பேரை பிடித்துள்ளனர்.
  Next Story
  ×