என் மலர்

  செய்திகள்

  பொன்னேரி அருகே மணல் லாரியால் குடிநீர் பைப் உடைந்தது: பெண்கள் மறியல்
  X

  பொன்னேரி அருகே மணல் லாரியால் குடிநீர் பைப் உடைந்தது: பெண்கள் மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொன்னேரி அருகே மணல் லாரியால் குடிநீர் பைப் லைன் உடைந்து தண்ணீர் சாலையில் வீணானது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

  பொன்னேரி:

  பொன்னேரியை அடுத்த தத்தை மஞ்சி ஏரியில் இருந்து அரசு அனுமதியுடன் டிராக்டர் மற்றும் லாரிகளில் சவுடு மண் அள்ளப்படுகிறது. கம்மார் பாளையம், ரெட்டி பாளையம் ஊராட்சி வழியாக செல்கின்றன.

  அதிக பாரத்துடன் லாரிகள் செல்லும் போது மனோபுரம், தலயேறி பாளையம், சிவபுரம் சோமஞ்சேரி, எல்.எஸ். பூதூர், ரெட்டி பாளையம் உள்ளிட்ட 20-க்கு மேற்பட்ட கிராமங்களில் சாலை ஓரத்தில் செல்லும் குடிநீர் பைப்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தலையேறி பாளையத்தில் மீண்டும் பைப் லைன் உடைந்து தண்ணீர் சாலையில் வீணானது.

  இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மணல் ஏற்றி வந்த 5 டிராக்டரையும் சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  கம்மார்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கயல் விழி பேச்சுவார்த்தை நடத்தினார். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  Next Story
  ×