என் மலர்

  செய்திகள்

  தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு
  X

  தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.21,632-க்கு விற்பனையாகிறது.
  சென்னை:

  கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 14-ந்தேதி ஒருபவுன் ரூ.21 ஆயிரத்து 40 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் ரூ.21 ஆயிரத்து 376-க்கு விற்றது.

  நேற்று பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.21 ஆயிரத்து 464 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ.168 அதிகரித்துள்ளது. ஒருபவுன் ரூ.21 ஆயிரத்து 632 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.21 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,704-க்கு விற்கிறது.

  தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவும் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.

  வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 400 ஆக உள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.40.40-க்கு விற்கப்படுகிறது.
  Next Story
  ×