என் மலர்

  செய்திகள்

  சாயல்குடியில் வாகனம் மோதி வாலிபர் பலி
  X

  சாயல்குடியில் வாகனம் மோதி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாயல்குடியில் வாகனம் மோதிய விபத்தில் பாதயாத்திரை சென்ற வாலிபர் பலியானார்.

  சாயல்குடி:

  கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள தொட்டிப்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் விக்னேஷ் (வயது 25). அதே ஊரைச் சேர்ந்த ராஜூ மகன் கிஸ்டன் (28).

  இவர்கள் 2 பேர் மற்றும் அந்த ஊரைச்சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், பாதயாத்திரையாக வேளாங்கண்ணி புறப்பட்டனர்.

  இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி ஆனந்த் நகர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த குழுவினர் நடந்து சென்றனர்.

  அப்போது தூத்துக்குடியில் இருந்து சாயல்குடி நோக்கி வந்த வாகனம், அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

  இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். கிஸ்டன் காயத்துடன் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  விபத்து குறித்து சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்.

  Next Story
  ×