search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு உற்சாக வரவேற்பு
    X

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு உற்சாக வரவேற்பு

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக பொறுப்பு ஏற்ற அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நேற்று பரமன்குறிச்சி மெயின் பஜார் சந்திப்புக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக பொறுப்பு ஏற்ற அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் பரமன்குறிச்சி மெயின் பஜார் சந்திப்புக்கு வந்தார். முன்னாள் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமநாதன் தலைமையில் படுக்கப்பத்து வெற்றிவேல், சந்தையடியூர் ரவிராஜா, மதன், பத்மராஜ் முன்னிலையில் மேள வாத்தியங்கள் வாணவேடிக்கையுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    ஆள் உயர மாலைகள், பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டது. 2 பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது. மெஞ்ஞானபுரம் பஜார் சந்திப்பிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    உடன்குடி மெயின் பஜார் சந்திப்பில் மேள வாத்தியங்கள் வாண வேடிக்கையுடன் ஒன்றிய தலைவர் பாலசிங் தலைமையில் நகர கழக செயலாளர் ஜான் பாஸ்கர், பரமன்குறிச்சி இளங்கோ, தாண்டவன்காடு கண்ணன், அ.தனராஜ் முன்னிலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய எம்.எல்.ஏ., திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதி அடங்கிய தெற்கு மாவட்டத்தை தி.மு.க. கோட்டையாக மாற்றுவேன் என்று கூறினார்.

    அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வின் சொந்த ஊரான தண்டுபத்தில் ஊர் எல்லையில் இருந்து மேளவாத்தியங்களுடன் வாண வேடிக்கை முழங்க சித்திரைநாதன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொ.மு.சங்க தலைவர் அன்பு தேவக்குமார், செயலாளர் கென்ஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆத்தூர் மற்றும் ஆறுமுகநேரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்காணி ரவுண்டானாவில் உள்ள காமராஜர் சிலைக்கு அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    பின்னர் வடக்கு ஆத்தூர், மற்றும் தெற்கு ஆத்தூரில் செண்டா மேளம் முழங்க தி.மு.க.சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆழ்வை ஒன்றிய செயலாளர் நவீன், மேலாத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் சதீஷ்குமார் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள தியாகி கே.டி.கோசல்ராம் சிலைக்கு அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார்.

    முன்னதாக அவரை ஆறுமுகநேரி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் அ.கல்யாணசுந்தரம், நகர செயலாளர் ராஜசேகர், கூட்டுறவு வேளாண்மை சங்க தலைவர் ராகவன் ஆகியோர் சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.

    மேலமைப்பு பிரதிநிதிகள் பாலசுப்பிரமணியன், முருகேசன், நகர பொறுளாளர் வரதராஜன், விக்னேஷ் மார்த்தாண்டன், விவசாய அணி முருகேசன், இளைஞரணி நகர செயலாளர் வெங்கடேஷ், ரவிக்குமார், பரிமளன், காங்கிரஸ் பிரமுகர்கள் சண்முகம், சற்குரு, அழகேசன் உள்பட திரளானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருச்செந்தூரில் காமராஜர் சிலைக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×