என் மலர்

  செய்திகள்

  ஆரணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
  X

  ஆரணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆரணியில் காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
  ஆரணி:

  ஆரணியில் காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டவுன்போலீஸ் நிலையம் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார்.

  தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரினாபேகம் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

  பள்ளிக்கூட தெரு, மார்க்கெட் ரோடு, காந்தி ரோடு, பழைய, புதிய பஸ் நிலையம், நகராட்சி சாலை வழியாக மீண்டும் டவுன் போலீஸ் நிலையத்தை அடைந்தது. பேரணியில் சாலை விபத்துகளை தடுப்பது குறித்த துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தவாறு மாணவர்கள் சென்றனர். முடிவில் சப்–இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் நன்றி கூறினார்.
  Next Story
  ×