என் மலர்

  செய்திகள்

  வடமதுரை அருகே கல்லூரி மாணவியை காரில் கடத்திய கும்பல்
  X

  வடமதுரை அருகே கல்லூரி மாணவியை காரில் கடத்திய கும்பல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடமதுரை அருகே கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
  வடமதுரை:

  திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை கிராமம் பில்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகள் சூர்யா (வயது 19). பிளஸ்-2 முடித்து தற்போது திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார்.

  இவரை அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் தனியார் பள்ளி பஸ் ஓட்டுனராக உள்ளார். கடந்த வாரம் ஆசை வார்த்தை கூறி சூர்யாவை முத்துப்பாண்டி கடத்திச் சென்றார். பின்னர் போலீசில் புகார் அளித்து சூர்யாவை மீட்டு கொண்டு வந்தனர்.

  பின்னர் மீண்டும் வீட்டில் இருந்த சூர்யாவை அவரது தாய் திருப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அனுப்புவதற்காக முயற்சி எடுத்தார்.

  அப்போது முத்துப்பாண்டி அவரது உறவினர்கள் ஆனந்தாயி, கோபால், மனோகர் ஆகியோர் காரில் சூர்யாவை மீண்டும் கடத்திச் சென்று விட்டனர். இது குறித்து சூர்யாவின் தாய் அம்சவள்ளி, வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திய கும்பலையும் தேடி வருகின்றனர்.
  Next Story
  ×