என் மலர்

  செய்திகள்

  திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியாரிடம் போக விடமாட்டோம்: சட்டசபையில் அமைச்சர் உறுதி
  X

  திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியாரிடம் போக விடமாட்டோம்: சட்டசபையில் அமைச்சர் உறுதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியாரிடம் போக விடமாட்டோம் என சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் கேள்விக்கு சட்டசபையில் அமைச்சர் சம்பத் உறுதிபட தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் அன்பில் பொய்யாமொழி பேசும் போது, ‘திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியார் மயமாக்க முயற்சி நடக்கிறது. தமிழக அரசு மத்திய அரசுக்கு தகுந்த அழுத்தம் கொடுத்து இதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றார்.

  இதற்கு பதில் அளித்து தொழில் துறை அமைச்சர் சம்பத் பேசியதாவது:-

  மத்திய அரசு நடத்தி வரும் இந்த துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து துப்பாக்கிகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகின்றன. மத்திய அரசின் திட்டக்குழு இந்த தொழிற்சாலையை தனியாருக்கு விடுவது பற்றிய சாத்திய கூறு குறித்து ஆய்வு செய்ய அந்த நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த தொழிற்சாலையை தனியாரிடம் செல்வதை தடுக்க பிரதமரிடம் முறையிடுவோம்.

  இவ்வாறு அவர் பேசினார்.
  Next Story
  ×