என் மலர்

  செய்திகள்

  திருவொற்றியூரில் எண்ணெய் குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் மறியல்: 500 பேர் கைது
  X

  திருவொற்றியூரில் எண்ணெய் குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் மறியல்: 500 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவொற்றியூர் சதானந்தபுரம் பகுதியில் ராட்சத எண்ணெய் குழாய்களை பதித்த அதிகாரிகளை அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
  திருவொற்றியூர்:

  சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சி.பி.சி.எல்.க்கு கச்சா எண்ணெயை குழாய்கள் பதித்து கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.

  இந்த குழாய்கள் திருவொற்றியூர், நெட்டுக்குப்பம், தாளங்குப்பம் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்கள் வழியாக செல்கிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  இந்த நிலையில் இன்று காலை திருவொற்றியூர் சதானந்தபுரம் பகுதியில் ராட்சத எண்ணெய் குழாய்களை புதைக்கும் பணி தொடங்கியது.

  இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அவர்கள் எண்ணெய் குழாய்களை பதித்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எண்ணூர் விரைவு சாலையில் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  பொது மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருவொற்றியூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணன். த.மா.கா. மாநில செயலாளர் சுகுமார், பகுதி தலைவர் சிவகுமார், தி.மு.க. முன்னாள் நகராட்சி தலைவர் திருசங்கு, மீனவர்கள் மக்கள் முன்னணி தலைவர் கோ.சு.மணி, சிங்காரவேலர் பொதுநலச் சங்க தலைவர் குணசீலன் ஆகியோரும் மறியலில் ஈடுபட்டனர்.

  திருவொற்றியூர் போலீசார் 500 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  கிராம மக்களிடம் அம்பத்தூர் ஆர்.டி.ஓ. அரவிந்தன், தாசில்தார் செந்தில்நாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  அப்போது, வருகிற வெள்ளிக்கிழமை சி.பி. சி.எல். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்த பின்பு எண்ணெய் குழாய் மீண்டும் பதிக்கப்படும். அதுவரை பணி நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Next Story
  ×