என் மலர்

  செய்திகள்

  மக்கள் நலதிட்டங்களை, கவர்னர் செயல்படவிடாமல் தடுக்கிறார்: நமச்சிவாயம் குற்றச்சாட்டு
  X

  மக்கள் நலதிட்டங்களை, கவர்னர் செயல்படவிடாமல் தடுக்கிறார்: நமச்சிவாயம் குற்றச்சாட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவையில் மக்கள் நலதிட்டங்களை கவர்னர் கிரண்பேடி செயல்படவிடாமல் தடுக்கிறார் என்று அமைச்சர் நமச்சிவாயம் குற்றம் சாட்டினார்.

  புதுச்சேரி:

  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் 48-வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமை தாங்கிய மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

  புதுவை கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க் கள் சட்டமன்றத்திலும், வெளியிலும் விமர்சித்துள்ளனர்.

  கவர்னரின் செயல்பாடுகளால் புதுவை மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் உருவாகி வருகிறது என்பதையும் கூறியுள்ளனர். புதுவை மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் கவர்னர் தடுத்து வருகிறார். அவருடைய அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிக்க தயாராக உள்ளோம்.

  உண்மைக்கு மாறான செய்திகளை கவர்னர் மக்களிடம் பரப்பி வருகிறார். எதிர்கட்சி போல செயல்பட்டு வரும் கவர்னரை வன்மையாக கண்டிக்கிறோம்.

  புதுவை மாநிலத்தை பொறுத்தவரை இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் மக்களோடு மக்களாக பழகி வாழ்ந்து வருபவர்கள். மக்களின் பிரச்சினைகளை தினந்தோறும் தீர்த்து வருபவர்கள்.

  தங்கள் சொந்த பணத்தை அளித்து மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பவர்கள். இதனால் தான் பல தொகுதிகளில் மீண்டும், மீண்டும் ஒருவரே எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்படுகிறார்.

  அதே வேளையில் புதுவை கவர்னர் டெல்லி மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். அவரால் தேர்தலில் டெபா சிட்கூட வாங்க முடிய வில்லை. புதுவை மக்களிடம் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூகவலை தளங்கள், நாளிதழ்களில் கவர்னர் திரித்து கூறி வருகிறார்.

  புதுவை மக்களை திசை திருப்பும் வகையிலான கவர்னரின் செயல்பாடு புதுவை மக்களிடம் எடுபடாது. கவர்னரால் பல திட்டங்களுக்கான கோப்புகள் கிடப்பில் கிடக்கிறது. காலதாமதத்தால் செயல்படுத்தப்பட முடியவில்லை.

  இதையெல்லாம் மீறி மக்களுக்கு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்காக எந்த போராட் டத்தையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதைத்தொடர்ந்து நிருபர்கள் அனைத்து கட்சி தலைவர்களோடு டெல்லியில் ஜனாதிபதியை சந்திக்க முடிவெடுக்கப்பட்டதே? ஏன் இன்னும் சந்திக்க வில்லை என்று கேள்வி எழுப்பினர்.

  இதற்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், மாற்றம் வந்து விடாதா? என எதிர்பார்த்திருந்தோம். வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் அவர் அரசை விமர்சித்து வருகிறார். மீண்டும் அனைத்து கட்சி தலைவர் களையும் அழைத்து ஆலோசனை செய்து ஒரு முடிவு காண்போம் என்று பதிலளித்தார்.

  முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த ராகுல்காந்தி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

  காங்கிரஸ் கட்சி பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளது. இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி என தலைவர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். ஆனால் அனைத்து சோதனைகளையும் கடந்து காங்கிரஸ் கட்சி இன்றும் உயிர்ப்போடு செயல்பட்டு வருகிறது.

  இதற்கு கட்சியின் லட்சோ பலட்சம் தொண்டர்கள்தான் காரணம். நாட்டின் இன்றைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் காங்கிரஸ்தான் காரணமாக இருந்துள்ளது. எதிர் கால இந்தியாவின் நம் பிக்கை நட்சத்திரமாக ராகுல் காந்தி திகழ்கிறார். பாரதீய ஜனதா கட்சி விளைவிக்கும் கேடுகளில் இருந்து காப்பாற்றும் சக்தி பெற்ற தலைவராக மக்கள் ராகுல்காந்தியை நம்புகின்றனர்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  Next Story
  ×