என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கடை, ஆரல்வாய்மொழியில் 8-ம் வகுப்பு மாணவி- இளம்பெண் கடத்தல்
Byமாலை மலர்31 May 2017 4:36 PM GMT (Updated: 31 May 2017 4:36 PM GMT)
புதுக்கடை மற்றும் ஆரல்வாய்மொழியில் 8-ம் வகுப்பு மாணவி, இளம்பெண் கடத்தப்பட்டது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
புதுக்கடை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின்பாலு. இவரது மகள் ஜெஸ்ரீனா (வயது 14). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
வீட்டில் இருந்த ஜெஸ்ரீனா திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து புதுக்கடை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் ஜெஸ் ரீனாவை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வாலிபர் அவரது பெற்றோரின் மோட்டார் சைக்கிளில் ஜெஸ்ரீனாவை வடசேரி பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளை வடசேரி பஸ் நிலையப் பகுதியில் நிறுத்திவிட்டு பஸ்சில் ஜெஸ்ரீனாவை கடத்திச் சென்றுள்ளார்.
போலீசார் மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர். கடத்தப்பட்ட மாணவியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் அருள். இவரது மகள் சுமித் அனுஷாராணி (வயது 17).இவர் அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுமித் அனுஷா ராணியை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டார். இதுகுறித்து அவரது தாயார் முத்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் கண்மணி வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.

Next Story
×