search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    பரமக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

    பரமக்குடி அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    பரமக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துராமன், மினிபஸ் டிரைவர். இவரது மனைவி கோகிலா தேவி (வயது 23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கோகிலாதேவி தனியாக வசித்து வருகிறார். மேலும் கோகிலாதேவி விவாகரத்து கேட்டு வழக்கும் தொடர்ந்து உள்ளார்.

    சம்பவத்தன்று கோகிலா தேவி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த முத்துராமன் மனைவியை வழிமறித்து தகராறு செய்து உள்ளார்.

    இதில் கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி செயினை பறித்து சென்றதாக கணவர் மீது கோகிலாதேவி பரமக்குடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×