என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக சட்டசபை புதிய செயலாளராக பூபதி நியமனம்
Byமாலை மலர்31 May 2017 7:12 AM GMT (Updated: 31 May 2017 7:12 AM GMT)
தமிழக சட்டசபையின் புதிய செயலாளராக பூபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபை செயலாளராக இருக்கும் ஜமாலுதீன் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இவரது பதவி காலம் ஏற்கனவே 2012-ம் ஆண்டு மே 31-ந்தேதி முடிவடைந்த நிலையில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவருக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீடிப்பு வழங்கினார்.
இன்றுடன் அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் புதிய செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சபாநாயகர் தனபால் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் சட்டசபையின் புதிய செயலாளராக பூபதி நியமிக்கப்பட்டார். அவர் இன்று சபாநாயகர் தனபால் அறையில் புதிய செயலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு சபாநாயகர் தனபால் வாழ்த்து தெரிவித்தார். அவர் 8 மாதம் இந்த பதவியில் இருப்பார்.
பூபதி இது வரை சட்டசபையின் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1983-ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவையில் உதவி பிரிவு அலுவலராக பணியில் சேர்ந்தார்.

Next Story
×