என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாட்டு இறைச்சிக்கு தடை: தமிழ்நாடு காங்கிரஸ் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் - சு.திருநாவுக்கரசர்
Byமாலை மலர்31 May 2017 2:42 AM GMT (Updated: 31 May 2017 2:42 AM GMT)
மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத் துறை சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. விவசாய தேவைக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடையாணை மூலம் மாட்டுத் தோல் மூலம் தயாரிக்கப்படும் தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டு ரூ.1 லட்சம் கோடி இறைச்சி வர்த்தகம் முடங்குகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
மிருகவதை தடுப்புச் சட்டம் மத்திய-மாநில அரசுகள் இரண்டும் இயற்றும் பொதுப் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் மாடுகள் விற்க தடை விதித்திருப்பது மாநிலங்களின் உரிமைகளை பறித்து கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கிற செயலாகும். மாட்டிறைச்சிக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையால் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான கொதி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இத்தகைய மத்திய அரசின் நடவடிக்கை குறித்து மாநில அரசு கருத்து கூறாமல் அடங்கி, ஒடுங்கிக்கிடக்கிறது. மாநில அரசின் உரிமையை பறிக்கிற இந்நடவடிக்கை குறித்து தட்டிக்கேட்க அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை.
எனவே, மாட்டிறைச்சிக்கு எதிரான மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், அதை தட்டிக் கேட்காத மாநில அரசை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத் துறை தலைவர் ஜெ.அஸ்லம் பாஷா தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா விஜயதரணி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
×