என் மலர்

  செய்திகள்

  பழனி வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பு
  X

  பழனி வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனி வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  பழனி:

  பழனி வனப்பகுதி 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு ஏராளமான அளவில் யானைகள் உள்ளது. அகில இந்திய ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 17-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது.

  முதல் நாளில் நேரடி பார்வை, 2-ம் நாளில் யானைகளின் லத்தி மற்றும் கால்தடங்கள் கொண்டு கணக்கிடுதல், 3-ம் நாளில் வனப்பகுதியில் உள்ள நீர்நிலையங்களை கண்காணித்து கணக்கிடப்பட்டது.

  பழனி வனச்சரகர் கணேஷ்ராம் தலைமையில் வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 30 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். 6 பேர் வீதம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு பணி நடந்தது. ஆண்டிப்பட்டி, குதிரையாறு, பொரியம்மாபட்டி, பாலசமுத்திரம், கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள கலையம்புத்தூர் ஆகிய இடங்களில் இக்குழுவினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

  இக்கணக்கெடுப்பின் மூலம் யானைகளின் எண்ணிக்கை பழனி வனச்சரகத்தில் அதிகரித்திருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை பெய்துள்ளதால் கொடைக்கானல் மழைப் பகுதியில் இருந்த யானைகளில் பெரும்பாலானவை பழனி வனப்பகுதிக்குள் வந்துள்ளன.

  நேரடி பார்வையுடன், காலடித்தடம், யானையின் எச்சம் இவற்றை அறிவியல் ரீதியான பகுப்பிற்கு உட்படுத்தி பார்த்தபின் யானைகளின் எண்ணிக்கை உயர்வு குறித்து அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என வனச்சரக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×