என் மலர்

  செய்திகள்

  விருதுநகரில் ஆம்னி பஸ் மோதி ஆவின் பால் ஊழியர் பலி
  X

  விருதுநகரில் ஆம்னி பஸ் மோதி ஆவின் பால் ஊழியர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதியதில் ஆவின் பால் ஊழியர் பலியானார்.

  விருதுநகர்:

  விருதுநகர் முத்தால் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது26). இவர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆவின் பாலகத்தில் வேலை பார்த்து வந்தார்.

  நேற்று இரவு பணி முடித்த மாரிமுத்து, வீட்டிற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியே அருப்புக் கோட்டையை சேர்ந்த சண்முகம் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தார்.

  அவரிடம் மாரிமுத்து ‘லிப்ட்’ கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி உள்ளார். அவர்கள் சர்வீஸ் ரோட்டில் இருந்து மெயின் சாலையை கடக்க முயன்றனர்.

  அப்போது அந்த வழியே வந்த தனியார் ஆம்னி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் வந்த சண்முகம் மற்றும் மாரிமுத்து தூக்கி வீசப்பட்டனர். இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். சண்முகம் காயத்துடன் உயிர் தப்பினார்.

  விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆம்னி பஸ் திசையன் விளையில் இருந்து சென்னை சென்றது தெரியவந்தது. தொடர்ந்து பஸ் டிரைவர் செங்கல்பட்டு தஸ்தகிர் கைது செய்யப்பட்டார்.

  Next Story
  ×