என் மலர்

  செய்திகள்

  ஆற்று மணல் தட்டுப்பாடு: மணல் விலை கடும் உயர்வு
  X

  ஆற்று மணல் தட்டுப்பாடு: மணல் விலை கடும் உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆற்று மணல் தட்டுப்பாடு காரணமாக மணல் விலை இரு மடங்கு உயர்ந்து ஒரு லோடு ரூ.35,000-க்கு விற்கப்படுகிறது.
  சென்னை:

  தமிழ்நாட்டில் சில வருடங்களுக்கு முன்பு மணல் எடுப்பதற்கான அனுமதி பஞ்சாயத்துகளிடம் இருந்து மாவட்ட கலெக்டர்களுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு மணல் அள்ளுவதில் முறைகேடுகள் நடக்கத் தொடங்கின. வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

  அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மணல் எடுப்பதாக புகார் கூறப்பட்டது. இதனால் நீராதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து தமிழ்நாட்டில் இயங்கி வந்த 225 மணல் குவாரிகள் மூடப்பட்டன. ஆறுகளில் மணல் அள்ளுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  ஆற்று மணல் இல்லாத காரணத்தால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டிடப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் மணல் விலையும் அதிகரித்து வந்தது.

  இதையடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் மணல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

  கோர்ட்டு உத்தரவையடுத்து தமிழ்நாட்டில் ஏராளமான குவாரிகள் மூடப்பட்டுள்ளன. சில மணல் குவாரிகளே செயல்படுவதால் மணலுக்காக லாரிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.

  சில மாதங்களுக்கு முன்பு மணல் ஒரு லோடு ரூ.18,000-க்கு விற்பனையானது. தற்போது ஆற்றுப்படுகையில் இருந்து பெறப்படும் மணல் ரூ.35,000 ஆக உயர்ந்துள்ளது. அது வெளியில் ரூ.40,000-க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுமானப்பணிகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடப்பதால் மணல் தேவை அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி சென்னைக்கு நாள்தோறும் 3,000 லோடு மணல் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

  தமிழ்நாடு முழுவதும் கட்டுமானப்பணிக்கு நாள் ஒன்றுக்கு 25,000 லோடு மணல் தேவைப்படுகிறது. இதில் சென்னைக்கு மட்டும் குறைந்தபட்சம் 5,000 லோடு தேவைப்படுகிறது. ஆனால் 1,200 லோடு மட்டுமே சப்ளையாகிறது. எனவே சட்ட விரோதமாக கடத்தல் நடைபெறுவதாக மணல் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
  Next Story
  ×