என் மலர்

  செய்திகள்

  காதலிக்க மறுத்ததால் நர்சை கத்தியால் குத்திய வாலிபர்
  X

  காதலிக்க மறுத்ததால் நர்சை கத்தியால் குத்திய வாலிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலிக்க மறுத்த நர்சை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  மதுரை:

  ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த மாடசாமியின் மகள் ராஜி (வயது 22). இவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வ ராஜின் மகன் சைமனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த வி‌ஷயம் பெற்றோருக்கு தெரிய வந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இதற்கிடையே ராஜிக்கும், சைமனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ராஜி சைமனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனை சைமனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

  ராஜியுடன் மறுபடியும் தனது காதலை புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டினார். இந்த நிலையில் நர்சு ராஜிக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துனர். இது சைமனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

  இதனையடுத்து முது குளத்தூர் கடையில் பூச்சி மருந்து வாங்கிய சைமன் கத்தியோடு மதுரைக்கு வந்தார். மதுரை ரிங்ரோடு விரகனூர் சந்திப்பில் ராஜி பஸ்சுக்காக காத்திருந்த போது சைமனும் அங்கு வந்தார்.

  ராஜி அருகே சென்ற சைமன், நான் உன்னை காதலிக்கிறேன். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வற்புறுத்தினார். ஆனால் ராஜி ஏற்றுக் கொள்ளவில்லை.

  ஆத்திரமடைந்த சைமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜியை சரமாரியாக குத்தினார். இதில் ராஜியின் முகம், கையில் கத்திக்குத்து விழுந்தது. உடனே சைமன், தான் வைத்திருந்த வி‌ஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

  பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டி ருந்தவர்கள் ஓடிச்சென்று சைமனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

  கத்தியால் குத்தப்பட்ட ராஜி உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். சிலைமான் போலீசார் சைமனிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது வாயில் நுரை தள்ளிய நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  மதுரை அரசு ஆஸ் பத்திரியில் இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜி புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து சைமனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×