என் மலர்

  செய்திகள்

  குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணி: முன்னாள் மத்திய மந்திரி ராசா தொடங்கி வைத்தார்
  X

  குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணி: முன்னாள் மத்திய மந்திரி ராசா தொடங்கி வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூரில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியை முன்னாள் மத்திய மந்திரி ராசா தொடங்கி வைத்தார்.
  பெரம்பலூர்:

  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டம் தோறும் தி.மு.க. சார்பில் நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

  பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அம்மா தோப்பு குளத்தை தூர்வாரி சீரமைக்கு பணியின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனையொட்டி முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான ராசா குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

  இதில் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், சிவசங்கர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சந்திரசேகரன், மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் வல்லபன், பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட தி.மு.க. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 
  Next Story
  ×