என் மலர்

  செய்திகள்

  கருங்கல் அருகே காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை
  X

  கருங்கல் அருகே காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  பள்ளியாடி:

  கருங்கல் அருகே மாத்திர விளையை சேர்ந்தவர் ராபின். இவர் திக்கணங்கோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுஜி (வயது 25). இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

  இந்த தம்பதிக்கு 1 1/2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் ராபின் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய போது  வீட்டில் சுஜி மயங்கி கிடந்து உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராபின் மனைவியை குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
  அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுஜி நேற்று பரிதாபமாக இறந்துவிட்டார்.

  இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சுஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  பிரேத பரிசோதனையில் சுஜி விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது.

  இதை தொடர்ந்து தற்கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எதற்காக சுஜி விஷம் குடித்தார்? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
  Next Story
  ×