என் மலர்

  செய்திகள்

  கொடைக்கானல் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் அடித்துக்கொலை
  X

  கொடைக்கானல் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் அடித்துக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைக்கானல் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது.

  பெரும்பாறை:

  கொடைக்கானல் கீழ் மலை கிராமமான பெரும்பாறை அருகே உள்ள பாலமலையை சேர்ந்தவர் பால்ராஜ். அவரது மனைவி பாரதி (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

  அதே பகுதியை சேர்ந்தவர் நாசரேசு (35). இவருக்கு திருமணமாகி ஜோதி என்ற மனைவியும் 2 குழந்தைகள் உள்ளன. நாசரேசுக்கும், பாரதிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த விசயம் ஊர் மக்களுக்கு தெரியவந்தது. எனவே அவர்கள் கள்ளக் காதலர்களை எச்சரித்தனர்.

  இதனால் நாசரேசு தனது காதலி பாரதியுடன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பூலத்தூர் அருகே உள்ள ஜே.பி.நகருக்கு சென்று விட்டார். அங்கேயே அவர்கள் 2 பேரும் வசித்து வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், பாரதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாசரேசுக்கு தெரியவந்தது. இதனால் அவர் தனது காதலியை எச்சரித்து ஒழுக்கமாக இருக்கும்படி கண்டித்தார்.

  கடந்த 2 நாளாக நாசரேசு வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே ஊர் மக்கள் தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  அவர்கள் வந்து பார்த்த போது பாரதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறந்து 2 நாட்கள் ஆகி இருந்ததால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. நாசரேசு எங்கே சென்றார் என்பது குறித்து தெரியவில்லை.

  தனக்கு தெரியாமல் வேறு வாலிபருடன் பழகியதால் நாசரேசு காதலி பாரதியை அடித்து கொன்று விட்டு தப்பி ஓடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது உடலை வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய நாசரேசுவை போலீசார் தேடி வருகிறார்கள். அது மட்டுமின்றி பாரதியுடன் பழகிய வாலிபர் யார்? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது.

  Next Story
  ×