என் மலர்

  செய்திகள்

  ராசிபுரம் அருகே மஞ்சள் மூட்டைகளை திருடியதாக 4 பேர் கைது
  X

  ராசிபுரம் அருகே மஞ்சள் மூட்டைகளை திருடியதாக 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராசிபுரம் அருகே வீட்டு வாசலில் இருந்த மஞ்சள் மூட்டைகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

  ராசிபுரம்:

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது அரியாகவுண்டம்பட்டி. இங்கு கடந்த 22-ந்தேதி விஸ்வநாதன் (58) என்பவரின் வீட்டு வாசலில் இருந்து தலா 50 கிலோ எடை கொண்ட 3 மஞ்சள் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

  மேலும் அந்த நபர்கள் மளிகை கடை உரிமையாளர் முத்துக்குமார் என்பவரின் மோட்டார் சைக்கிளை திருடி அதன் மூலம் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே தனது வீட்டு வாசலில் இருந்த 15 ஆயிரம் மதிப்புள்ள மஞ்சள் மூட்டைகள் காணவில்லை என்றும், அதனை கண்டு பிடித்து தருமாறு விஸ்வநாதன் நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

  சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மஞ்சள் மூட்டைகளை திருடியதாக ஆட்டையாம்பட்டியை சேர்ந்த மோகனசுந்தரம்(28), வெண்ணந்தூர் வடுகம்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி(23), நாமகிரிப்பேட்டையை சேர்ந்த ராமசுந்தரம்(30), பச்சுடையாம் பாளையத்தை சேர்ந்த சின்னப்பையன்(28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

  கைதான சின்னப்பையன் மீது முத்துக்குமாரின் 2 சக்கர வாகனத்தை திருடியதாக வழக்குபதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதும், ஏற்கனவே அவர் மீது திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதும் குறிப்பிட்டதக்கது.

  Next Story
  ×