என் மலர்

  செய்திகள்

  தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தே தீரும்: பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
  X

  தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தே தீரும்: பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தே தீரும் என திருச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
  திருச்சி:

  பெரும்பிடுகு முத்தரையரின் 1342-வது சதயவிழாவில் கலந்து கொண்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றி விட்டது. பா. ஜனதா ஆட்சி தமிழகத்தில் அமைந்தே தீரும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் ஆட்சியை கலைத்து விட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதில்லை.

  தமிழக அரசு நடவடிக்கை கல்வித்துறையில் சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் வண்டல் மண் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வைரவிழா எடுப்பது அவரை ஏமாற்றுவதற்காக செய்யும் செயலாகும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×