என் மலர்

  செய்திகள்

  காவிரி, ஈழம் உள்ளிட்ட பிரச்சனைகளில் ரஜினியின் கொள்கை என்ன?” - நல்லகண்ணு கேள்வி
  X

  "காவிரி, ஈழம் உள்ளிட்ட பிரச்சனைகளில் ரஜினியின் கொள்கை என்ன?” - நல்லகண்ணு கேள்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, காவிரி, ஈழம் உள்ளிட்ட பிரச்சனைகளில் ரஜினியின் கொள்கை என்ன? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.
  சென்னை:

  நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, காவிரி, ஈழம் உள்ளிட்ட பிரச்சனைகளில் ரஜினியின் கொள்கை என்ன? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.

  தமிழக அரசியல் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சினை சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சு மற்றும் பிரவேசம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ,”ரஜினிக்கு என்ன கொள்கை உள்ளது?, காவிரி, ஈழப் பிரச்னையில் ரஜினியின் கொள்கை மற்றும் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து அவர் விளக்க வேண்டும்” என கூறினார்.

  மேலும், தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை தடுக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் நல்லகண்ணு வலியுறுத்தினார்.
  Next Story
  ×