என் மலர்

  செய்திகள்

  பல்லடம் அருகே காதலி இறந்த சோகத்தில் வடமாநில வாலிபர் தற்கொலை
  X

  பல்லடம் அருகே காதலி இறந்த சோகத்தில் வடமாநில வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலி இறந்த சோகத்தில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பல்லடம்:

  பீகார் மாநிலம் பீட்டமாரி பகுதியை சேர்ந்தவர் முனேஷ் குமார் (வயது 21). இவர், தனது அண்ணன் மற்றும் உறவினர்களுடன் பல்லடம் அருகே குங்குமம் பாளையத்துக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். அங்குள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தனர்.

  மேலும் பனியன் கம்பெனி குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

  இந்த நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணை முனேஷ் குமார் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

  இதற்கிடையே கடந்த 20-ந் தேதி அவர் காதலித்து வந்த இளம்பெண், இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. இதை கேட்டு முனேஷ் குமார் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தார்.

  இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த முனேஷ்குமார், நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பல்லடம் போலீசார் விரைந்து வந்து முனேஷ்குமார் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×