என் மலர்

  செய்திகள்

  கோத்தகிரி அருகே மதுக்கடையை சூறையாடிய பெண்கள் கோவை சிறையில் அடைப்பு
  X

  கோத்தகிரி அருகே மதுக்கடையை சூறையாடிய பெண்கள் கோவை சிறையில் அடைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோத்தகிரி அருகே மதுக்கடையை சூறையாடிய 28 பெண்களை போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். கைதான அனைவரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
  கோத்தகிரி:

  கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டி ஊராட்சியில் கட்டபெட்டு பஜார் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டது.

  இதற்கிடையே கடந்த மாதம் எம்.கைகாட்டி பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த மாதம் 21-ந்தேதி முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய டாஸ்மாக் அதிகாரிகள், இன்னும் 15 நாளில் கடையை மூடிவிடுவதாக தெரிவித்தனர்.

  ஆனால் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தப்படி டாஸ்மாக் கடை மூடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர்.

  இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடை முன்பு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் திரண்டனர். அவர்கள் திடீரென டாஸ்மாக் கடையின் பூட்டுகளை உடைத்து கடைக்குள் சென்றனர். அங்கிருந்த மதுபாட்டில்கள் பெட்டைகளை தூக்கி வந்து சாலையில் போட்டு உடைத்தனர். மேலும் தாணி கரைசலை கடை முழுவதும் ஊற்றி தங்களது எதிர்ப்பை காட்டினர்.

  இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோத்தகிரி தாசில்தார் மணிமேகலை, போலீஸ் இன்ஸ்பெக்டர் இருள்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் நசீர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

  மேலும் டாஸ்மாக் கடையை சூறையாடியதாகவும், அரசு சொத்தை சேதப்படுத்தியதாகவும் 32 பெண்கள் உள்பட 39 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் 4 பெண்கள் கைக்குழந்தைகளுடன் இருந்ததால் அவர்களை மட்டும் போலீசார் விடுவித்தனர். பின்னர் 28 பெண்கள் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

  பின்னர் கைதான 35 பேரையும் போலீசார் கோத்தகிரி கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். கைதான அனைவரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
  Next Story
  ×