என் மலர்

  செய்திகள்

  பழைய வண்ணாரப்பேட்டையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மீது தாக்குதல்
  X

  பழைய வண்ணாரப்பேட்டையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மீது தாக்குதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழைய வண்ணாரப்பேட்டையில் 4 பேர் கும்பல் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரை வழிமறித்து இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  ராயபுரம்:

  பழைய வண்ணாரப்பேட்டை புதிய சோலையப்பன் தெருவில் வசித்து வருபவர் அறிவழகன். அ.தி.மு.க. பிரமுகர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்.

  நேற்று இரவு அவர் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு கோதண்ட ராமன் தெரு வழியாக வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது 4 பேர் கும்பல் அவரை வழிமறித்து இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

  இதில் அறிவழகன் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிவழகன் தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில், அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் 4 பேரை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×