என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அலங்காநல்லூர் அருகே டீ மாஸ்டர் கொலை
Byமாலை மலர்15 May 2017 12:42 PM GMT (Updated: 15 May 2017 12:42 PM GMT)
கண்மாய்கரையில் டீ மாஸ்டர் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 42). இவர் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள டீ கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று பணி முடிந்து ஊருக்கு சென்ற அவர், வீட்டிற்கு செல்லவில்லை. இந்த நிலையில் அங்குள்ள சிலையனேரி கண்மாய் கரையில் அவர் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இது குறித்து அவரது மனைவி மீனா (36) அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று கணேசன் உடலை மீட்டனர். அவரது முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. எனவே அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
அவரை எங்காவது கொண்டு சென்று கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றார்களா? அல்லது கண்மாய் கரையில் வைத்துதான் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கணேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story
×