என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.8 1/2 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்15 May 2017 12:17 PM GMT (Updated: 15 May 2017 12:17 PM GMT)
கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை ஊழியர்களை கட்டிப்போட்டு கடையில் இருந்த பணத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை, தச்சூர் கூட்டுச்சாலை, போரக்ஸ் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சூப்பர் வைசராக ஜெயச்சந்திரனும், ஊழியராக வேலுவும் உள்ளனர்.
நேற்று இரவு விற்பனை முடிந்து மதுக்கடையை பூட்டி விட்டு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில் சென்ற போது காரில் வந்த மர்ம கும்பல் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.
இதில் நிலை தடுமாறிய ஜெயச்சந்திரனும், வேலுவும் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய முகமூடி அணிந்த கும்பல் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
மது விற்பனை பணத்தை பாஸ்மாக் கடையில் வைத்து விட்டு வந்ததாக 2 பேரும் தெரிவித்தனர்.இதையடுத்து முகமூடி கும்பல் ஜெயசந்திரனையும், வேலுவையும் கயிற்றால் கட்டி காரில் ஏற்றினர். பின்னர் மதுக்கடைக்கு காரை ஓட்டிச்சென்றனர்.
அங்கு சென்றதும் மது பாரில் தூங்கிய ஊழியர்கள் குமரகுருபரன், கந்தையா ஆகியோரையும் முகமூடி கும்பல் தாக்கி கட்டி போட்டனர். பின்னர் மதுக்கடையை திறந்து அங்கிருந்த ரூ. 8 லட்சத்து 48 ஆயிரத்தை எடுத்து தப்பி சென்று விட்டனர்.

Next Story
×