என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அரசு பஸ்களை ஓட்ட தற்காலிக டிரைவர், கண்டக்டர் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்
Byமாலை மலர்15 May 2017 11:57 AM GMT (Updated: 15 May 2017 11:57 AM GMT)
ஊதிய ஒப்பந்தம், நிலுவை தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசு பஸ்களை ஓட்ட தற்காலிக டிரைவர், கண்டக்டர் வேலைக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சென்னை:
பஸ் ஸ்டிரைக் தொடங்கி இருப்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்தை தொடங்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் டிரைவர்- கண்டக்டர்கள் பணிக்கு வராததால் முடங்கிகிடக்கும் பஸ்களை இயக்குவதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தற்காலிக டிரைவர்- கண்டக்டர்களை தேர்வு செய்து உடனடியாக பணி வழங்கி வருகிறார்கள். தினக் கூலி அடிப்படையில் சேர்க்கப்படும் இவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து வேலையில் நியமிக்க அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் புதிதாக டிரைவர்-கண்டக்டர்கள் வேலைக்கு சேர்க்கப்படுகிறார்கள்.
தற்போது தினக் கூலிகளாக சேர்க்கப்படும் ஊழியர்களுக்கு பணி நியமனத்தின் போது முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை புறநகர் போக்குவரத்து கழகத்தில் தற்காலிக தினக்கூலி டிரைவர், கண்டக்டராக பணியாற்ற கனரக வாகன உரிமம், நடத்தனர் உரிமம் வைத்துள்ளவர்கள் அசல் சான்றிதழ் உடன் அருகில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக கிளை மேலாளரை நேரில் உடனே அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமும் புதிதாக ஊழியர்கள் எடுக்கப்படுகிறார்கள். அங்குள்ள டிரைவர்கள் பட்டியலை கணக்கெடுத்து அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story
×