search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திமுக. மாவட்ட செயலாளர்களிடம் நேர்காணல்: மாதவன்
    X

    எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திமுக. மாவட்ட செயலாளர்களிடம் நேர்காணல்: மாதவன்

    எம்.ஜி.ஆர்.ஜெ.ஜெ தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நேர்காணல் நடைபெற உள்ளது. நேர்காணலில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என மாதவன் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கே. மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    எம்.ஜி.ஆர்.ஜெ.ஜெ தி.மு.க மாவட்ட செயலாளர்களிடம் நேர்காணல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நேர்காணலில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். வட பழனி பஸ்டெப்போ அருகில் உள்ள தோஷிகார்டன் முதல் தளத்தில் காலை 9 மணிக்கு தொடங்கும் நேர்காணல் நிகழ்ச்சி மாலை 5 மணி வரை நடைபெறும்.

    நாளை (வெள்ளி) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுக்கும் 6-ந்தேதி புதுச்சேரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர்களுக்கும் நேர்காணல் நடைபெறும்.

    7-ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், மாவட்டங்களுக்கும் 8-ந் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மாவட்டங்களுக்கும் 9-ந் தேதி திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும்.

    11-ந் தேதி மதுரை விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்களுக்கும் நேர்காணல் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×