என் மலர்

  செய்திகள்

  கத்திப்பாரா மேம்பாலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திடீர் போராட்டம்: இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் கைது
  X

  கத்திப்பாரா மேம்பாலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திடீர் போராட்டம்: இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
  சென்னை:

  வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஒரு மாத காலமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குநர் கவுதமன் தலைமையில் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மேலும் பலர் திரண்டனர். சாலையை மறித்து சங்கிலியால் பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 
  இப்போராட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில்,  முன்னறிவிப்பின்றி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
  இதைத் தொடர்ந்து இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். சாலையில் திடீரென நசத்தப்பட்ட போராட்டத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  Next Story
  ×