என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற விழிப்புணர்வு ஊர்வலம்
Byமாலை மலர்4 April 2017 5:49 PM GMT (Updated: 4 April 2017 5:49 PM GMT)
நாமக்கல் மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவது குறித்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிக்கு ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்டு உள்ள அட்வகேட் கமிஷனர் பொன்ராம் ராஜா கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த ஊர்வலம் அண்ணாசிலை, பரமத்தி சாலை, பூங்கா சாலை, பஸ் நிலையம், அரசு தலைமை மருத்துவமனை வழியாக மீண்டும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. இதில் மகளிர் திட்ட இயக்குனர் மணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்திரசேகரன், நாமக்கல் உதவி கலெக்டர் ராஜசேகரன், தாசில்தார் ராஜ்மோகன், ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ் கண்ணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் என 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Next Story
×