search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாராய வியாபாரிகள் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    சாராய வியாபாரிகள் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    வேலூர் மாவட்டத்தில் சாராய வியாபாரிகள் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவாஜி (வயது 48). இவர் மீது 10க்கும் மேற்பட்ட சாராய வழங்குகள் நிலுவையில் உள்ளன.

    அரக்கோணம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் சிவாஜியை சமீபத்தில் சாராயம் விற்ற போது கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    அதே போல் பள்ள குண்ணத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த சிவா (47) என்பவர் மீதும் சாராயம் விற்றதாக 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பகலவன், கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    அனைக்கட்டு தாலுகா அத்தியூரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 26). பிரபல ரவுடி. சில நாட்களுக்கு முன்னர் வழிப்பறியில் ஈடுபட்ட இவனை பாகாயம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு இன்ஸ்பெக்டர் அருள் பிரசாத் பரிந்துரைத்தார். தொடர்ந்து எஸ்.பி., கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார். இதைஏற்று முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கான உத்தரவு நகல், சிறையில் உள்ள முருகனிடம் நேற்று மாலை வழங்கப்பட்டது.
    Next Story
    ×