என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
வடமதுரை அருகே பண ஆசை காட்டி குழந்தையை விலைக்கு வாங்கிய கும்பல்
Byமாலை மலர்4 April 2017 10:37 AM GMT (Updated: 4 April 2017 10:37 AM GMT)
வடமதுரை அருகே பண ஆசை காட்டி குழந்தையை விலைக்கு வாங்கிய கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொம்பேறிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி வேலாயி என்ற நாகலெட்சுமி (வயது 28). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
சிவக்குமார் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். கணவர் இறந்தது முதல் மிகுந்த மனவேதனையில் இருந்த நாகலெட்சுமி தனது குழந்தைகளை வளர்க்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இதனை பயன்படுத்தி சிலர் நாகலெட்சுமியிடம் உனது கடைசி ஆண் குழந்தையை விற்றால் உனக்கு பணம் கிடைக்கும். அந்த குழந்தையும் வசதியாக வாழும் என்று கூறினர்.
அதன்படி பூ விற்பனை செய்யும் செம்பாயி என்பவர் நாகலெட்சுமியின் 2-வது மகனான 10 மாத குழந்தை சுஜித் என்பவனை கரூரைச் சேர்ந்த கும்பலுக்கு விலை பேசினார். இதற்கு சிலர் இடைத் தரகர்களாக இருந்துள்ளனர். ரூ.2 லட்சம் வரை குழந்தையை விலை பேசி சில ஆயிரம் ரூபாயை மட்டும் நாகலெட்சுமிக்கு கொடுத்துள்ளனர்.
அதன் பிறகு குழந்தை விற்ற விபரம் தெரியவரவே டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தீவிர விசாரணை நடத்தினார் அப்போது கரூரில் குழந்தையை வாங்கிய கும்பலை சுற்றி வளைத்தார். அவர்கள் தாங்கள் குழந்தையை வளர்ப்பதற்காக விலைக்கு வாங்கிச் சென்றதாக கூறினர்.
இதனையடுத்து குழந்தையை மீட்டு வந்ததுடன் அதனை விற்ற கும்பலிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×