search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
    X

    வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    தமிழக அரசை கண்டித்து தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சென்னை:

    டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை கண்டு கொள்ளாதது வறட்சி நிவாரண நிதி வழங்கியதில் பாரபட்சம் காட்டியது ஆகியவற்றுக்காக மத்திய அரசை கண்டித்தும், ரேசனில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு, குடிநீர் பஞ்சம் ஆகியவற்றை தீர்க்காத மாநில அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை (5-ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமை தாங்கினார்.

    பொருளாளர் தி.நகர் ஸ்ரீராம், அருள் பெத்தையா, துறைமுகம் ரவிராஜ், திருவான்மியூர் மனோகரன், வனிதா சுப்பிரமணியன், நாச்சிக்குளம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய கராத்தே தியாகராஜன், மாநில கமிட்டி அறிவித்துள்ளபடி இதே கோரிக்கைக்காக இதே இடத்தில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் கலந்து கொள்கிறார்.

    சோனியா பற்றி தவறாக விமர்சனம் செய்த எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மாநில தலைவர் ஒப்புதல் பெற்று பா.ஜனதா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.
    Next Story
    ×