search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் சிறையில் அடைக்கப்பட்ட வைகோவுக்கு முதல் வகுப்பு
    X

    புழல் சிறையில் அடைக்கப்பட்ட வைகோவுக்கு முதல் வகுப்பு

    புழல் ஜெயிலில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் அடைக்கப்படும் முதல் வகுப்பு பிளாக்கில் வைகோ அடைக்கப்பட்டார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் வைகோ நேற்று எழும்பூர் 14-வது கோர்ட்டில் திடீரென்று ஆஜராகி கோர்ட்டில் சரண் அடைவதாக தெரிவித்தார். வைகோவிடம் மாஜிஸ் திரேட்டு கோபிநாத் சொந்த ஜாமீனில் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

    ஆனால் ஜாமீனில் செல்ல விரும்பவில்லை என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுத்து தன்னை சிறையில் அடைக்க உத்தரவிடும்படியும் கூறினார்.

    மாஜிஸ்திரேட்டு வருகிற 17-ந்தேதி வரை 15 நாட்கள் வைகோவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மாலை வைகோ புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    புழல் ஜெயிலில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் அடைக்கப்படும் முதல் வகுப்பு பிளாக்கில் வைகோ அடைக்கப்பட்டார்.

    இன்று காலை அவருக்கு சிற்றுண்டியாக பொங்கல்-வடை வழங்கப்பட்டது. அதை வைகோ சாப்பிட்டார். பின்னர் அவருக்கு காலை பத்திரிகையும் வழங்கப்பட்டன.

    சிறை நூலகத்தில் இருந்து புத்தகங்களை வரவழைத்து வைகோ படித்தார்.
    Next Story
    ×