என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து வீட்டுமனை பத்திரப்பதிவு தொடங்கியது
Byமாலை மலர்4 April 2017 12:51 AM GMT (Updated: 4 April 2017 12:51 AM GMT)
ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து வீட்டுமனை பத்திரப்பதிவு தொடங்கியதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது.
சென்னை:

விவசாய நிலங்கள், வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுக்கக்கோரிய வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை பதிவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தடை விதித்தது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன் வீட்டுமனைகளாக பதிவு செய்யப்பட்ட மனைகளின் விற்பனையை மறுபதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி, அதிகமானோர் விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்றனர். ஆனால் ஐகோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு பத்திரப்பதிவு துறை தலைவரின் அறிவுறுத்தல் கிடைக்கவில்லை என்று கூறி சார்பதிவாளர்கள் பதிவு செய்ய வந்தவர்களை திருப்பி அனுப்பினார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், பத்திரப்பதிவு துறை தலைவர் ஆர்.செல்வராஜ் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதில், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை பதிவுக்கு தடைவிதிக்கும் வகையில், பதிவு சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாளுக்கு முன், வீட்டுமனைகளாக பதிவு செய்யப்பட்ட வீடு, மனைகளை சட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்யலாம் என்று கூறியிருந்தார்.
இந்த உத்தரவு அனைத்து மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் நேற்று முதல் பழைய வீட்டுமனைகள் விற்பனை பத்திரங்கள், சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடந்தது. இதனால் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இதுகுறித்து பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வீடு, மனைகளை சட்டத்திற்கு உட்பட்டு பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவை ஏற்று அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
குறிப்பாக செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழக்கமாக ஒரு நாளைக்கு 5 முதல் 7 பத்திரப்பதிவுகள் நடக்கும். ஆனால் நேற்று 21 பத்திரப்பதிவுகள் நடந்துள்ளது. அதேபோல் மாதவரத்தில் வழக்கம்போல் 2 அல்லது 3 பத்திரப்பதிவுகள் நடக்கும். ஆனால் தற்போது 7 பத்திரப்பதிவுகள் நடந்துள்ளது.
இதுதவிர கூடுவாஞ்சேரி, படப்பை, சைதாப்பேட்டை, அடையாறு, வேளச்சேரி, குன்றத்தூர், தியாகராயநகர், அசோக்நகர் உள்ளிட்ட சென்னை மண்டலத்தில் 150 அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும் பணி நடந்தது. அதேபோல் அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகள் மற்றும் பதிவு செய்தவர்கள் குறித்த விவரத்தையும் தலைமை அலுவலகத்துக்கு 15-ந் தேதிக்குள் அனுப்பிவைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
அத்துடன் பதிவு செய்யப்படும் பத்திரங்கள் குறித்த விவரங்களும் உடனுக்குடன் கணினியில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் அதிகளவு பரவலாக பத்திரப்பதிவுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story
×